கலேவெலவில் புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (04) மாலை 4.00 மணிக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறும்.
தபால் துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட உள்ள இந்த நவீன கட்டிடத்தின் எதிர்பார்க்கப்படும் செலவு ரூ. 14.70 மில்லியன் ஆகும். தற்போதைய கட்டிடம் 1970 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டது.
அந்தக் கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததாலும், பல நடைமுறை பிரச்சனைகள் காணப்பட்டதால், கலேவெலவில் புதிய தபால் நிலையக் கட்டிடத்தை நிறுவ சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் புதிய தபால் அலுவலகம் நிறுவப்பட்ட பிறகு, கலேவெல பகுதி மக்கள் சிறந்த மற்றும் வினைத்திறனான தபால் சேவையைப் பெற முடியும்.
தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு அஞ்சல் துறையில் புதிய கட்டுமானங்களுக்காக ரூ. 600 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
வினைத்திறனான சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் சிறந்த சேவை முன்னோடியாக இருப்பதே இலங்கை அஞ்சல் துறையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நாட்டில் அஞ்சல் சேவை 220 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.