நாட்டில் சுகாதார சேவையின் தற்போது நடைமுறையில் உள்ள விடயங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்துப் பரிமாற்றம் போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பொறுப்பதிகாரியான திரு. ஃபுன்ட்ஷோ வாங்கியல் (Mr. Phuntsho Wangyel), சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்து, நாட்டின் தற்போதைய சுகாதார சேவை குறித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில்
நடைபெற்றது.
மேலும் திரு. ஃபுன்ட்ஷோ வாங்கியல் (Mr. Phuntsho Wangyel) அவர்கள் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) நாடுகளுக்குரிய பொறுப்பதிகாரியாக செப்டம்பர் 01, 2025 முதல் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.
திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கொள்கை பகுப்பாய்வு ஆகியவற்றில் விரிவான நிபுணத்துவமும் அனுபவமும் கொண்ட திரு. வாங்கே, நாட்டில் சுகாதார சேவை அமைப்பின் கட்டமைப்பின் தற்போதைய செயல்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் நீண்ட கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்.
நாட்டில் தாய் மற்றும் சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அத்துடன் அது தொடர்பான மருத்துவ உபகரணங்களை வழங்குவது, நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கையை சிறப்பாக நெறிப்படுத்த கல்வி மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வது, பாலியல் கல்விக்கான திட்டத்தை வலுப்படுத்துதல் சம்பந்தமான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான முறையில் சுகாதார சேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக, சுகாதாரக்கொள்கையின் தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் சுகாதாரக் கொள்கையின் படி நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவும் திட்டம் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ திரு. ஃபுண்ட்ஷோ வாங்கியாலுக்கு விளக்கமளித்தார்.