வகைப்படுத்தப்படாத

அமைச்சரவை மாற்றம்: சற்று நேரத்தில்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவையில் இன்று மாற்றம் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நிதி அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மங்கள சமரவீரவுக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சுப் பதவி ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சு பதவியை ராஜினாமா செய்த  முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கயந்த கருணாதிலக்கவுக்கு நாடாளுமன்ற சீர்திருத்த மற்றும் காணி அமைச்சுகள் வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

Vijay Sethupathi to play cricketer Muttiah Muralitharan

Power disruptions likely in several areas

சிரியாவில் வான் தாக்குதல்