வகைப்படுத்தப்படாத

அமெரிக்க ராணுவ மந்திரி பாகிஸ்தான் வருகை

(UTV|AMERICA)-அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைமை மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், மேற்படி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார். அவர், அமெரிக்க ராணுவ மந்திரியாக பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

தனது பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஜிம் மேட்டிஸ், ‘தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். தங்கள் சொந்த நலனுக்காகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கு, பொதுவான திட்டம் ஒன்றை உருவாக்குவதும், இணைந்து செயல்படுவதுமே இந்த பயணத்தின் நோக்கம்’ என்றார்.

எனினும், ‘அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானின் நிலையில் எவ்வித மாற்றமும் காணவில்லை’ என அமெரிக்க மூத்த அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Nato chief calls on Russia to save INF nuclear missile treaty

மருத்துவ துறையில் கால்பதிக்க இருக்கும் அமேசான் நிறுவனம்

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி வழங்கிய சீனா