உலகம்

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை மேலும் அதிகரித்து பதிலடி வழங்கும் சீனா

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சீனா 84% வரி விதித்துள்ளது.

இது நாளை (10) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இந்த வரி விதிப்பை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

34% வீதமாக இருந்த வரியையே சீனா இவ்வாறு 84% ஆக அதிகரித்துள்ளது.

சீனப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி, 104% வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor

20 ஆம் திகதிக்குள் பாலஸ்தீனத்தில் யுத்த நிறுத்தம் – மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கத்தார்

editor

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்