உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தை மறுத்த இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதியில் நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்குவதே எமது கொள்கை.

எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதி செய்தல், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவை மாறுபடலாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று இரு தலைவர்களுக்கும் இடையே எந்த உரையாடலும் நடந்ததாக எனக்குத் தெரியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது

கொரோனா வைரஸ் : சீனாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

ஈரானில் 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து