உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு?

இஸ்ரேலிய பாராளுமன்ற சபாநாயகர் அமிர் ஒஹானா (Amir Ohana), அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் டிரம்ப் அளித்த பங்களிப்புக்காக இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதோடு சமாதான ஒப்பந்தங்களிலும் வலுவான பங்களிப்பைச் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்று (13) இஸ்ரேல் வந்தடைந்தார்.

மேலும், இன்னும் சில நிமிடங்களில் இஸ்ரேலிய பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உரையாற்ற உள்ளார்.

Related posts

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

இன்று சூரிய கிரகணம்

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய தடை