உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இல்லையாம்

அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கௌரவமாக கருதுகின்றனர்.

இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

இரண்டாவது முறையாக பதவியேற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 7 போரை நிறுத்தியுள்ளேன்.

அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக ட்ரம்ப் கூறி வருகிறார்.

எப்படியும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தமக்கு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ட்ரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Related posts

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை அதிகரிப்பு – 1 இலட்சம் பேர் வெளியேற்றம் | வீடியோ

editor

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

ட்விட்டர் பயனர்களிடமிருந்து கட்டணம் அறவிட யோசனை