அரசியல்உள்நாடு

அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி அநுர

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

CEYPETCO தீர்மானமில்லை

கொழும்பினை விஞ்சும் களுத்துறை

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வௌியான அறிவிப்பு

editor