அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதோடு மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பின்னர், ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானில் இருக்கும் போது, ​​இந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, சிரேஷ்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

editor

10 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

editor

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!