வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்

(UTV|AMERICA) அமெரிக்க கணினி வலையமைப்புக்களை வௌிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மேற்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வௌிநாட்டுத் தொடர்பாடல்களை உள்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான நிறைவேற்று ஆணையொன்றிலும் இவர் கைச்சாத்திட்டுள்ளார்.

மேலும் ,சீன தொடர்பாடல் ஜாம்பவான் என அறியப்படும் நிறுவனமொன்றை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Related posts

සිර දඬුවම් නියමවූ හිටපු නියෝජ්‍ය පොලිස්පතිට ඇප මත මුදාහැරේ

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்

ලංකාව ඉහළ මැදි ආදායම් ලබන රටක් බවට ශ්‍රේණිගත කරයි – ලෝක බැංකුව