உலகம்

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாட்டங்களின் போது நடந்த தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கௌவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இராணுவ வீரர்களுக்கான நினைவு நாளாக கடைப்பிடிக்கிறது.

இந்த நிலையில் நினைவு நாள் கொண்டாட்டங்களின்போது சிகாகோ நகரில் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு சிகாகோவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹம்போல்ட் பூங்காவில் ஏராளமான மக்கள் திரண்டு பொழுதை போக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மக்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தெற்கு பகுதியில் உள்ள வாஷிங்டன் பூங்காவில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்.

Related posts

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுதீ

மார்ச் 2022-க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம்

உலக அளவில் சுகாதார அவசர நிலையாக பிரகடனம்