அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸார் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் குற்ற வழக்கு தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்ய சென்ற சமயம் குறித்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அதன் விளைவாக 03 பொலிஸ் அதிகாரிகள் பலியானதோடு இருவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சி.என்.என்.