உலகம்

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து – 05 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கால்வெஸ்டன் விரிகுடாவுக்கு அருகே மருத்துவ பணியில் ஈடுப்பட்டிருந்த சிறிய ரக மெக்சிகோ கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.

மேலும், டெக்சாஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்தவர்களில் நான்கு பேர் கடற்படை அதிகாரிகள், நான்கு பேர் பொதுமக்கள். அவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில், கடந்த சில நாட்களாக மூடுபனி நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர் கேமரூன் பாடிஸ்ட் தெரிவித்துள்ளார்.

Related posts

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

இறுகியது பிரித்தானியா