உலகம்

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்தனர். அந்நாட்டு நேரப்படி 12.37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்காகா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து இருப்பதால் இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.

எனினும், சமீப காலமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது மக்களை அச்சமடைய வைத்து இருக்கிறது.

கடந்த 1964 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு நிலநடுக்கம் அலஸ்காவில் ஏற்பட்டது.

அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்தது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலஸ்காவின் வளைகுடா மற்றும் ஹவாய், அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது.

Related posts

ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா கட்டுப்பாடு

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை