அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில், இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மூன்று இளைஞர்கள் உட்பட 09 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஆணையாளர் கெவின் பெதல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அச்சமயம் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
அச்சமயம் ஏற்பட்ட குழப்பகர நிலையில் கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி பிரயோகக் கலாசாரத்துக்கு இச்சம்பவம் மேலுமொரு சாட்சியமாக உள்ளது.
அண்மையில், தெற்கு கரோலினாவிலுள்ள லிட்டில் ரிவரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் காயமடைந்த நிலையில், இந்தச் துப்பாக்கி பிரயோக சம்பவம் நடந்துள்ளது.
தெற்கு கரோலினா துப்பாக்கி பிரயோக சம்பவம், ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், 15 அமெரிக்கர்களில் ஒருவர் ஏதோ ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
கொலராடோ பவுல்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, அமெரிக்காவில் உள்ள வயது வந்தோரில் 7 சதவீதம் பேர் ஏதோ ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்துள்ளனர். 2 சதவீதம் பேர் துப்பாக்கிச்சூடு ஒன்றில் காயமடைந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.