அரசியல்உள்நாடு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு நாள் கொட்டகலைய சி.எல்.எப் வளாகத்தில் இன்று(26) அனுஷ்டிக்கப்பட்டது!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எப் வளாக ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயாவின் பாரியார் ராஜலஷ்சுமி தொண்டமான், தவிசாளரும், நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் உட்பட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு!