உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

67 வயதான கிலானி ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜரான பிறகு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் தலைவருமான சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மார்ச் 2022-க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம்

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

லண்டனில் சிறிய ரக விமானம் விபத்து

editor