விளையாட்டு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ரொபின் உத்தப்பா ஓய்வு

(UTV |  சென்னை) – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ரொபின் உத்தப்பா அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 46 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரொபின் உத்தப்பா 934 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன், 13 இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடி 249 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Related posts

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

ஹர்த்தாலுக்கு கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்காது – ஏ.எல் கபீர்.

இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்த ஏஞ்சலோ!!