உள்நாடுவணிகம்

அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையில் மாற்றம்

(UTV|கொழும்பு) – பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலையைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகையை மக்களுக்கு வழங்கும் வகையிலேயே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஊடக சந்திப்பின் போது, விலைக் குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று(25) வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் விலை பெரும்பாலும் 5 ரூபாவினால் குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்