உள்நாடு

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் தரம் 1 தொடக்கம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஓகஸ்ட் 10ஆம் திகதி அனைத்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது கல்வியமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 27ஆம் திகதி தொடக்கம் தரம் 11,12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”