உள்நாடு

அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

(UTV | கொழும்பு) – அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே, பழங்கால பழக்கவழக்கங்களுக்கும், மரபுகளுக்கும் முன்னுரிமை அளித்து, விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் கலாசார ரீதியாக மதிப்புமிக்க சமூக நடைமுறைகள் இந்த தமிழ், சிங்கள புத்தாண்டின் மூலம் நினைவு கூரப்படுகின்றது.

அரசாங்கம் வழங்கிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி ஒழுக்கமான மக்கள் என்ற வகையில் அனைவரும் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாக, இப்புத்தாண்டை இந்த அளவிற்கேனும் சுதந்திரமாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே, சுகாதார நடைமுறைகளை மனதில் கொண்டு, கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

மக்கள் மீது சுமத்தப்படும் சுமையை பொறுப்பேற்று, அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் வளமாக்க அரசாங்கம் செயற்படுவதாக பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

அண்மைக்காலமாக அதிகரித்த விச ஜந்துக்களின் நடமாட்டம் !

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பான் உடன்பாடு

editor