நாட்டில் உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்து அதனூடாக மக்களுக்கு உரிய சேவைகளை பெற்றுக் கொடுப்போம்!
பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதற்கு உரிய முறையில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவும் மற்றும் பொதுமக்களுக்கு விரைவாக சேவையை வழங்குவதற்காகவும் வேண்டி இரத்தினபுரி மாவட்டத்தில் கொடக்கவெல நகரில் பொதுமக்கள் சந்திப்பு ஒருங்கிணைப்பு காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இன்றையதினம் (17) கொடக்கவெலையில் அமைந்துள்ள பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உரிய முறையில் சேவையை பெற்றுக் கொடுப்பதற்காகவே மேற்படி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கிராமப்புற மற்றும் தோட்டப்புறங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் தனக்கு கிடைக்கப்பெற்று வருவதாகவும் இதற்கு உரிய தீர்வுகளை உடனுக்குடன் பெற்றுக் கொடுப்பதற்கும் தமது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டப்புற மற்றும் கிராமப்புற மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் உட்பட சுகாதாரம் மற்றும் குடியிருப்பு, கல்வி, ஆசிரிய நியமனங்கள், கலாச்சாரம், விளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகள், சுயதொழில், உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் நிறைவேற்றி கொடுப்பதற்கு அரசாங்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்து அதனூடாக பொதுமக்களுக்கு
பல்வேறு சேவைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி செய்தியாளர்