உள்நாடு

அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில்

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட அளவிலும் அழைத்து பணி புரியும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

   

Related posts

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை