அரசியல்உள்நாடு

அனுரவை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (30) காலை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை,  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

Related posts

ட்ரோன் கெமராக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில்

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆய்வுக்கு குழு

யானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தீர்ப்பு இன்று!