உள்நாடு

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

(UTV | கொழும்பு) –

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என அண்மைய நாட்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2022-2023 சிவனொளிபாத மலை பருவகாலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்ரீ பாதஸ்தானதிபதி சப்ரகமு மாகாண பிரதம சங்கநாயக பெங்கமுவே தம்மதின்னவின் பணிப்புரைக்கமைய அனுமதியின்றி ஹட்டன் வீதி மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாகவும் சிவனொளிபாத மலைக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் , சிவனொளிபாத மலைக்கு வருகை தரும் போது, உரிய நிறுவனங்களின் அனுமதியைப் பெற்று நல்லதண்ணி மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிவனொளிபாத மலை பகுதியில் இடையிடையே பலத்த மழை பெய்து வருவதாலும், அங்கு செல்லும் படிகளில் பாரிய நீரோடை ஓடுவதாலும் ஸ்ரீ சிவனொளிபாத மலைக்கு செல்வது ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் சிவனடி பாதமலை க்கு வழிபட உள் நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை தகுந்த அனுமதி இன்றி மலை ஏற வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR முறையின் ஊடாக கட்டணம் அறவிட அனுமதி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி – அமைச்சர் விஜித ஹேரத்

editor