உள்நாடு

அனர்த்த நிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு – 2 பேர் பலி – 20,300 பேர் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மழை, வெள்ளம் காரணமான அனர்த்தங்களால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மலபட்டாவ பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹங்குரன்கெத்த ஊடாக கண்டிக்குச் செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக, பாறைகள் சரிந்து விழும் அவதான நிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“ஹக்கீம் இருக்கும்வரை அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைமை பதவி இல்லை” ஜவாத்

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை அவர் நாட்டிலேயே உள்ளார் எவரும் அழைக்கவில்லை – சாகர காரியவசம்

editor

சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி – அமைச்சர் விஜித ஹேரத்

editor