உள்நாடு

அனர்த்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிகாட்டல் வௌியீடு

அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கும், மண்சரிவு அபாயம் உள்ள வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்குமான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்காக இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2025-12-05 திகதியிடப்பட்ட வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கை இலக்கம் 08/2025 மற்றும் 2025-12-20 திகதியிடப்பட்ட வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கை இலக்கம் 08/2025 (i) ஆகியவற்றின் ஊடாக முன்மொழியப்பட்ட வலுவூட்டல் திட்டத்தின் கீழ், வீட்டுச் சேதங்களுக்கான கொடுப்பனவுகளை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நிலவிய அனர்த்தம் மற்றும் அதன் பின்னரான அனர்த்த சூழலினால் ஏற்பட்ட வீட்டுச் சேதங்கள் இதற்குப் பொருந்தும்.

கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் அனர்த்தத்தினால் அழிவடைந்திருந்தால், அவற்றை இலவசமாக வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் தகுந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் எழும் போது, கிராமிய மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிவாரணச் சேவைக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் அல்லது பிற உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களைக் கொண்டு கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்.

அல்லது ஆவணங்களை பின்னர் சமர்ப்பிக்கும் அடிப்படையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கிராமிய அனர்த்த முகாமைத்துவக் குழு மற்றும் பிரதேச செயலாளருக்கு மேலதிகமாக, பின்வரும் அதிகாரிகளுக்கும் இந்த நிவாரணப் பணிகளில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன:

நிர்வாக கிராம உத்தியோகத்தர்

காணி உத்தியோகத்தர்

சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்

வீட்டு வசதிகள் அதிகாரசபைப் பிரதிநிதி

சமுர்த்தி உத்தியோகத்தர்

நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பிரதிநிதி

வீட்டு வசதி உத்தியோகத்தர்

ஏனைய கள உத்தியோகத்தர்கள்

Related posts

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

editor

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை ஆரம்பம்

புத்தளம் மாவட்டத்தின் புதிய செயலாளராக கடமையேற்றார் வை.ஐ.எம்.சில்வா!

editor