அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – திருகோணமலை – கொழும்பு புகையிரத சேவை 20.12.2025 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னம்பிட்டி புகையிரத பாதையில் நடைபெற்று வரும் திருத்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னர் மட்டுமே மட்டக்களப்புக்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும் புகையிரதம் பகல் 2.00 மணிக்கு திருகோணமலையை சென்றடையும்.
அதேபோன்று, திருகோணமலையிலிருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் புகையிரதம் பகல் 2.30 மணிக்கு கொழும்பை சென்றடையும்
என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
