வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார், குஞ்சுக்குளம் பகுதியின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக இன்று (16) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.
குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்து கொண்டதுடன், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடலையும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கொண்டார்.
-UTV நிருபர்
