சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனம் 50 இலட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கியது.
அது தொடர்பான காசோலையை எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரோஷன் உடகே, நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு எதிர்காலத்தில் மேலும் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரோஷன் உடகே இதன்போது ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
