உள்நாடுவணிகம்

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்றினால் நாட்டில் ஏற்படும்  பொருளாதார பாதிப்பை குறைக்கும் நோக்கில் சர்வதேச நிதியினை  நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் W.D. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டு மக்கள் மற்றும் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வௌிநாட்டு இருப்பு, நிதியத்தை, இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் அவர் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

தற்போதைய  நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு  இது பாரிய ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்தவும், வரி வசூலிப்பை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுனர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேசத்தில் இருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு , 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்