அரசியல்உள்நாடு

அநுர அலைக்கு முடிவு – நாம் பெருவெற்றி பெற்றுள்ளோம் – சுமந்திரன்

பிரிந்து நின்று எதிர்கொள்வதே உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்களின் பிரதினிதித்துவத்தின் அதிகரிபுக்கும் இருப்புக்கும் வலிமை தரும் என்று அன்று நான் கூறுயது இன்று (07) நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், நடைபெற்று முடிந்த தேர்தல் அநுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருப்பை உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில் வலிதாக்கி எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.

மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ழுண்டு விடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு 40 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் பெருவெற்றி பெற்றுள்ளோம்.

இந்த வெற்றியானது தமிழ் தேசியத்தின்பால் மக்கள் கொண்டுள்ள நேசத்தை காட்டுகின்றது.

இந்நேரம் பல சபைகளில் ஆட்சியமைக்கும் தரப்பாக நாம் இருந்தாலும் அதற்கான பெரும்பான்மை பலத்தை சக தமிழ் கட்சிகள் வழங்கவேண்டிய அல்லது ஆதரவு கோர வேண்டிய தேவையும் இருக்கின்றது.

காலச்சூழலின் நிலலையை உணர்ந்து சக தமிழ் கட்சிகள் அதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

எனவே தமிழ் மக்களின் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உறுதியாகவே இருக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பிரதீபன்

Related posts

யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

editor

தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை உலகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை -பாலஸ்தீனிய பத்திரிகையாளர்.