சூடான செய்திகள் 1

அநுராதபுரத்தில் 11 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) பொசன் பூரணையை முன்னிட்டு நாளை மறுதினம் (13) முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரக்காலம் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரசேதசங்களில் உள்ள 11 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பொசன் பூரணை காலத்தில் விசேட கடமைகளுக்காக பிற மாகாணங்களில் இருந்து வரும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதியை வழங்குவதற்காக குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நான் ஏன் தோற்றேன் என்பதை விளக்க இங்கு வரவில்லை – ரணில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு

editor

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார் – இளைஞன் கைது

editor

10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை இல்லை…