உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

அனுராதபுரம் – திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது இன்னும் தகவல் வௌியாகவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மின்சார சபை 8,200 கோடி ரூபா இலாபம் : மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க பரிந்துரை

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு