அரசியல்உள்நாடு

அநீதிக்குள்ளாகியுள்ள ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக நான் முன் நிற்பேன் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அநீதிக்குள்ளாகியுள்ள 16,600 ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக நான் முன்நிற்பேன்.

இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது, ​​இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல என அரசாங்கம் கூறியது.

கடந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 53,000 பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தி, அவர்களில் 22,000 பேரை இலவசக் கல்வியை வலுப்படுத்த ஆசிரியர்களாக உள்ளீர்த்தது.

கோவிட்-19 தொற்றுநோயின் சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் சிறந்த சேவைகளை முன்னெடுத்திருந்தாலும் அதிகபட்ச வேலைகளை வாங்கிய பின்னர் அரசாங்கம் தற்போது அவர்களை கைவிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்தாலும், நேரடியாக இணைத்துக் கொள்ளாது, சாதாரண முறைமையின் ஊடாக ஆசிரியர் சேவையில் இணையுமாறு அரசாங்கம் கூறிவருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களாக பணியாற்றி வந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்திக்க சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் நடைமுறைப் பரீட்சை எழுதி, தரம் 2.2 க்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு, பின்னர் மூன்று ஆண்டுகளுக்குள் முதுகலை டிப்ளோமாவை பெற சமரசம் மூலம் முடிவு செய்துள்ளதாகவும், 2005 ஆம் ஆண்டு கூட இந்த வழியில் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டதால், இப்போது அவ்வாறு செய்ய முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக இலாபம் அடைந்த பின் அரசாங்கம் இவர்களை ஒரம்கட்டி விட்டது.

இவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அரசியல் ரீதியாக இலாபம் அடைந்த பின்னர் அரசாங்கம் இவர்களை ஒரம்கட்டி விட்டது. இவர்களுக்காக இன்றும் எதிர்காலத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும்.

பிரதமரின் அமைச்சரவைக் குறிப்பின்படி, இளங்கலைப் பட்டம் அடிப்படைத் தகுதியாக உள்ள பதவிகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, 50,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, தயவுசெய்து இவர்களுக்கு தொழில்களை வழங்குமாறும், கடமை, நீதி மற்றும் நியாயத்தை நிறைவேற்றுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சியில் இருந்தால் நிச்சயமாக நியாயத்தை வழங்குவோம்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படும்.

இவர்களது உரிமைகளுக்காக முன்நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மாஸ்க் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

இன்று முதல் அனுமதி

கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை