உள்நாடு

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

(UTV|கொழும்பு) – பதிவு செய்யப்பட்டாமல் நீண்ட தூர சேவைகளில் ஈடுபட்டு வந்த 17 அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தொடர்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறித்த பேருந்துகள் சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றை பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்ததகாவும் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல, குறித்த பேருந்துகள் கொழும்பு-வெள்ளவத்தை மற்றும் தெமடகொட பிரதேசத்தில் இருந்து இரவு நேரங்களில் மக்களிடம் அதிகளவான கட்டணத்தை வசூலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

அரச பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!

சீமெந்து விலை மீண்டும் உயர்வு