உள்நாடு

அதிவேக வீதியில் விசேட சோதனை – 45 சட்டவிரோத மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் ஊடாகப் பயணித்த அனைத்து வாகனங்களும் இன்று (18) காலை விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதியில் 45 சட்டவிரோத மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்திய நபர்களுக்கு எதிராகவும் பொலிஸார் இதன்போது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

ஈரான் செல்லும் அலி சப்ரி!

மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

editor

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்.

editor