சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொடை நுழைவாயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வீதி சீர்த்திருத்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த விபத்தில் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை பழுது பாரத்துக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை-நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்…

எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்படும்?