உள்நாடு

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க அரசிடம் நிதி இல்லை

(UTV | கொழும்பு) – அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அகற்ற வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்ட போதிலும் தற்போதைய நிதி நிலைமையின் அடிப்படையில் குறித்த மாற்றங்களைச் செய்வதற்கான நிதி இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக பிரதமர் தலைமையில் துணைக்குழு ஒன்றை அமைக்க நேற்றைய (26) அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி தகவல்!

இன்று மேலும் 274 பேருக்கு கொரோனா