சூடான செய்திகள் 1

அதிபர்கள் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும்..

(UTV|COLOMBO)-தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், இனிவரும் காலங்களில் ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும் என கல்வி சேவைகள் குழு தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த கால எல்லை 10 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதனை 8 ஆண்டுகளாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி நிர்வாக சேவையின் ஏனைய அனைத்து அதிகாரிகளும் 6 வருடங்களுக்கு மாத்திரமே ஒரு இடத்தில் சேவையாற்ற முடியும் என்ற கொள்கைக்கு அடுத்தவாரம் அனுமதி பெறப்பட உள்ளதாக கல்விச் சேவைகள் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் சேவைக்காலம் தொடர்பில் இதுவரை தெளிவான கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என அந்த அதிகாரி சுட்டிக்காட்டி உள்ளார்.

இதேநேரம், கல்வி நிர்வாக சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும், தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்காக மட்டுமல்லாது கல்விச் சேவையின் அந்த தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், இடமாற்றம் வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இது குறித்து கல்விச் சேவைகள் குழு கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, 250இற்கும் அதிகமான பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் கல்வி சேவைகள் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள அதிபர்களும் இதற்கமைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்

வெளியாகியது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

editor