உள்நாடு

அதிக விலைக்கு டைல்ஸ் விற்பனையா? அறிவிக்க தொலைபேசி இல

(UTV | கொழும்பு) – அதிக விலைக்கு டைல்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள டைல்ஸ் தட்டுப்பாட்டை சில விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் டைல்ஸ் விற்பனை செய்வதாக இலங்கையில் உள்ள முன்னணி டைல்ஸ் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையிடம் முறைப்பாடு அளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சில டைல்ஸ் விற்பனையாளர்கள் பல்வேறு வண்ண டைல்களை வழங்கி நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது

பிரதமர் ஹரிணியிடம் பாபுசர்மா விடுத்துள்ள கோரிக்கை!

editor

கடவுச்சீட்டுக்கான வரிசை – ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் – முஜிபுர் எம்.பி

editor