உலகம்

அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன ஜனாதிபதி

சீனாவின் ஷி ஜின்பிங், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரிவுகளுக்கு பிரதிநிதிகளை நியமித்து தன் 12 ஆண்டுகால ஆட்சியில் முதன் முறையாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார் ஷி ஜின்பிங். இதையடுத்து 2013ல் சீனாவின் ஜனாதிபதியானார். அந்நாட்டின் மற்றொரு முக்கிய பதவியான மத்திய இராணுவ கமிஷன் தலைவர் பதவியும் அவர் வசமே உள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஒருவர் 10 ஆண்டுகள் நீடிப்பது மரபாக இருந்தது. அரசு நிர்வாகம் மற்றும் இராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஷி ஜின்பிங் அந்த மரபை உடைத்தார். இதனால் வாழ்நாள் ஜனாதிபதி என ஷி ஜின்பிங் கருதப்படுகிறார்.

இந்நிலையில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரமிக்க 24 உறுப்பினர்கள் உடைய அரசியல் குழு கூட்டம் ஜூன் 30இல் கூடியது. கட்சி அமைப்புகளின் பணிகள் குறித்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி ஷி ஜின்பிங், ‘கட்சியின் மத்திய கமிட்டியின் முடிவெடுத்தல், ஆலோசித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேலும் தரப்படுத்துவதற்கு இந்த விதிமுறைகள் உதவும்.

‘இத்தகைய அமைப்புகள் முக்கிய பணிகளுக்கு மிகவும் திறம்பட்ட தலைமை மற்றும் ஒருங்கிணைப்பையும் வழங்க வேண்டும். முக்கிய பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.

Related posts

இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

ரைஸியின் அஞ்சலி நிகழ்வு: UNயின் அழைப்பை புறக்கணித்த அமெரிக்கா!

அல்-ஷிபா மருத்துவமனையில் சுரங்கம்- இஸ்ரேல் வெளியிட்ட காணொளி.