உலகம்

அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட 2 ஆவது நாடாக ஸ்பெய்ன்

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் 738 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3,434 பேர், சீனாவில் 3,281 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் உயிரிழந்த இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் பதிவாகியுள்ளது.

உலகளவில் இந்த வைரசால் 4 லட்சத்து 38 ஆயிரத்து 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தொட்டுள்ளது.

Related posts

மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி

பிரேஸிலை பின்னுக்குத் தள்ளியது இந்தியா

எரிபொருள் இறக்குமதியில் உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ்