உள்நாடு

அண்மைக்காலமாக அதிகரித்த விச ஜந்துக்களின் நடமாட்டம் !

(UTV | கொழும்பு) –

கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்த ஆற்று முகத்துவாரம் வெட்டப்பட்டன.
இதனால் ஆறுகளில் தேங்கிய நீர் வெள்ளம் கடலை சென்று சங்கமித்ததுடன் ஆற்றில் இருந்த விச ஜந்துக்கள் கடற்கரை ஓரங்களில் நடமாடி வருகின்றன.

இவ்விச ஜந்துக்கள் இம்மாவட்டத்தில் மருதமுனை, பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், பகுதிகளில் நடமாடி வருகின்றன. விச ஜந்துக்களான பாம்புகள் பூராண்கள் தேள்கள் நண்டுகள் விசப்பூச்சிகளின் தொல்லை என கடற்கரை பகுதிகளில் அதிகரித்துள்ளதனால் கடற்கரை பகுதிகளுக்கு செல்கின்ற பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படும் – SLPP

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை