உள்நாடுபிராந்தியம்

அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

editor

கோட்டா கோ கிராமத்தின் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு