நடைபெற்று முடிந்த மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு நான்கு தங்கப்பதக்கங்களை வென்றெடுத்த முஹம்மது ஆத்திக் என்ற மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று கெளரவிக்கப்பட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ரப் தாஹிர் இன்று (20) குறித்த மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்திதுடன் பொண்ணாடை போர்த்தி நினைவுச்சிண்ணம் வழங்கி கொளவித்திருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, கட்சியின் அட்டளைச்சேனை மத்திய குழுவின் செயலாளர் இர்பான், கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர் எச்.எம். இல்முடீன் உள்ளட்னோர் கலந்து கொண்டனர்.