அரசியல்உள்நாடுபிராந்தியம்

அட்டாளைச்சேனையில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா இன்று (19.11.2025) புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் Ac. அப்கர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சரும்,கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த பியஸ்திஸ்ஸ, சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், பிரதியமைச்சரின் இணைப்பாளர், அட்டளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திட்டமில் பணிப்பாளர், உதவி திட்டமில் பணிப்பாளர், கணக்காளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-ஊடக பிரிவு

Related posts

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம் 

மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கையில் சர்வதேச தலையீடுகள் அவசியப்படாது – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

editor