உள்நாடுகாலநிலை

அடுத்த 36 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகம் வந்தன

இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை.