உள்நாடு

அடுத்த வாரம் நாட்டுக்கு ஆறு எரிவாயு கப்பல்கள்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரத்தில் மேலும் ஆறு எரிவாயு கப்பல்கள் நாட்டினை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு இருப்பு 33,000 மெட்ரிக் டன்னாக இருக்கும்.

பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சந்தையில் வெளியிடப்பட்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக இருந்த போதிலும், தற்போது அதனை 100,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

editor

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க IMF உத்தேசம்